ஜூலை 25, குளச்சல் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் சுங்கவரித்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் சக்தீஷ்வர் (வயது 17). 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு தற்போது முயன்று வருகிறார். இதனிடையே நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சடைத்து மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்து மரணம் :
அவரை கண்ட அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அப்போது சக்தீஷ்வரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோரிடமும் இது குறித்து விசாரித்தனர். Gold Rate Today: உயர்ந்த வேகத்தில் சரிவை சந்தித்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய தங்கத்தின் விலை என்ன?.!
யூடியூப் பார்த்து பழச்சாறு டயட் :
அப்போது சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்துள்ளார். கல்லூரிக்கு தற்போது செல்வதால் உடல் பருமனை பார்த்து மாணவர்கள் கேலி செய்யலாம் என நினைத்துள்ளார். அதனால் உடல் எடையை குறைக்க யூடியூப்பில் கிடைத்த தகவலின் பெயரில் கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக உணவு ஏதும் சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.
மருத்துவர்களின் எச்சரிக்கை :
இதனால் சளி தொல்லைக்கு ஆளானவர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில், நேற்று அதிக சளித்தொல்லை காரணமாக மயங்கி விழுந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கையில், உரிய அங்கீகாரம் பெற்ற சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வை இல்லாமல் உடல் எடையை தானாக குறைக்க யாரும் முயற்சிக்க கூடாது. குறிப்பாக சமூக வலைதளங்களை கண்டு எதுவும் முயற்சி செய்யவேண்டாம் என எச்சரிக்கின்றனர்.