Chennai Shocker: கொசுவர்த்தி ஏற்றிவைத்து போதையில் உறக்கம்; வீடே தீப்பிடித்து காவலாளி உடல் கருகி பலி.!
வீட்டில் தனியாக இருந்த காவலாளி, மதுபோதையில் உறங்கி கொசுவர்த்தியால் பரிதாபமாக பலியாகினர்.
அக்டோபர் 27, கண்ணகி நகர் (Chennai News): சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மூர்த்தி தனது வீட்டில் தனியே வசித்து வரும் நிலையில், நேற்று இரவு மதுபோதையில் உறங்கி இருக்கிறார்.
உறங்கும்போது கொசுக்கடி தொல்லை தாங்க இயலாமல், கொசுவர்த்தி ஏற்றி வைத்ததாக தெரியவருகிறது. அச்சமயம், கொசுவர்த்தியின் கனல் படுக்கையின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீ பரவி மூர்த்தியும் தீயில் சிக்கியுள்ளார்.
அவர் போதையில் இருந்ததால் எவ்வித அலறல் சத்தமும் கேட்கவில்லை. அக்கம் பக்கத்தினர் கரும்புகை எழுவதை கண்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். Ginger Tea Caution: மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு எதுவாக இஞ்சி தேநீர்; அதிகமாக குடிப்போருக்கு எச்சரிக்கை.. விபரம் இதோ.!
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தபின்னர் தான், மூர்த்தியின் சடலம் உள்ளேயே கருகிய நிலையில் இருப்பது தெரியவந்தது.
அவரின் உடலை மீட்ட கண்ணகி நகர் காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கொசுவர்த்தி படுக்கையின் மீது விழுந்து எரிந்து உயிர் பறிபோனது உறுதியானது.
இந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் கொசுவர்த்தியை ஏற்றிவைத்து உறங்கும் நபர்கள் கவனமாக செயல்படாவிடில் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதத்தை உணர்ந்து, சுதாரிப்புடன் செயல்படுவது சாலச்சிறந்தது.
(The above story first appeared on LatestLY on Oct 27, 2023 08:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

