அக்டோபர் 26, சென்னை (Health Tips): மழைக்காலம் தொடங்கி விட்டாலே பலருக்கும் சளி, இருமல் உட்பட குளிர்கால நோய்கள் ஏற்படுவது வழக்கம். இதனை சரி செய்வதற்கு பலரும் இஞ்சி, சுக்கு, துளசி போன்ற தேநீரை விரும்பி குடிப்பார்கள்.

இதில், இஞ்சி தேநீர் பலரின் விருப்ப தேர்வாக இருக்கும். ஏனெனில் டீக்கடைகளில் குளிர்காலங்களில் இவை பிரதானமாக விற்பனை செய்யப்படும். இஞ்சி தேநீர் உடலுக்கு நன்மை எனினும், அதனை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது கட்டாயம் அது உடல் ரீதியான பிரச்சனையை ஏற்படுத்தும்.

இஞ்சி மருத்துவ குணநலங்கள் நிறைந்த பொருள். அதனை அளவுடன் பயன்படுத்துவது சாலச்சிறந்தது. நமது உணவில் இஞ்சியின் பயன்பாடு என்பது நான்கு கிராமுக்கு மேல் அதிகரித்தால், அது கட்டாயம் பக்க விளைவை கொண்டு வரும். IDF Approach Northern Gaza: ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க முழுவீச்சில் தரைவழி தேடுதல் வேட்டை; வடக்கு காசாவில் களமிறங்கிய இஸ்ரேலிய படைகள்.!

இஞ்சி தேநீர் அதிகம் குடிக்கும் பட்சத்தில் வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்றவையும் ஏற்படும். ஒரு சிலருக்கு நெஞ்சு எரிச்சலும் ஏற்படும். இஞ்சி தேநீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் அமில உற்பத்தி காரணமாக நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.

உடலில் இரத்த சர்க்கரையின் அளவு குறைந்து, சர்க்கரை நோயாளிகள் அது சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்ளக்கூடும். மனரீதியாக அமைதியற்ற நிலை, தூக்கமின்மை போன்றவையும் ஏற்படும். அதே போல, மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு முன்பு இஞ்சி தேநீர் குடிக்காமல் இருப்பது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் இஞ்சி தேநீர் குடிக்கும் பட்சத்தில், நெஞ்சு எரிச்சல், குமட்டல் போன்றவையும் ஏற்படும். வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு வரலாம். இரைப்பை பிரச்சனைகளும் அதிகளவு ஏற்படும். இதனால் இரைப்பைப் பிரச்சினை இருப்பவர்கள், பித்தப்பை கல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி தேநீர் குடிக்காமல் இருப்பது நல்லது.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி தேநீரை அறவே தவிர்க்க வேண்டும்.