வானிலை: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்.!

இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

மே 22, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் :

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில்,தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (22-05-2025) ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும். அதன் பிறகு இது மேலும், வலுவடைய வாய்ப்புள்ளது.

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

இன்று 22-05-2025 முதல் 28-05-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Thanjavur Accident: அரசு பேருந்து - டெம்போ நேருக்குநேர் மோதி 6 உயிர்கள் துள்ளத்துடிக்க பலி.. தமிழகத்தில் கோர விபத்து.! 

சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):

சென்னையை பொறுத்தவரையில் இன்று (22-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (23-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள் :

மீனவர்களுக்காக எச்சரிக்கையாக தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று 22-05-2025 முதல் 26-05-2025 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடலோர பகுதிகள் :

வங்கக்கடல் பகுதிகளில் இன்று 22-05-2025 முதல் 26-05-2025 வரை ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் :

அரபிக்கடல் பகுதிகளில் இன்று (22-05-2025) தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்- கோவா- கர்நாடக - கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (23-05-2025) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு அரபிகடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்- கோவா கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

(The above story first appeared on LatestLY on May 22, 2025 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).