Thanjavur Bus - Tempo Accident (Photo Credit :@kumudamNews24x7 / @NewsTamilTV24x7 X)

மே 22, தஞ்சாவூர் (Thanjavur News Today): தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை அரசு பேருந்து - தனியார் டெம்போ நேருக்கு நேர் மோதிக்கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டெம்போவில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Gold Silver Price: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?.. விவரம் இதோ.! 

நிகழ்விடத்திலேயே நான்கு பேர் பலி :

மேலும் விபத்தில் சிக்கியவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடந்தது. அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற போது விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் நடந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

13 பேர் படுகாயம் :

இந்த விபத்தில் மொத்தமாக 13 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மேற்படி விபரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கு பின் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காணொளி :