TN Weather Update: வாட்டி வதைக்கப்போகும் வெயில்; 2 நாட்களுக்கு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்.!

வரும் 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை மிதமான அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறினாலும், வெயில் காரணமாக அசௌகரிய சூழல் உண்டாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

TN Weather Update: வாட்டி வதைக்கப்போகும் வெயில்; 2 நாட்களுக்கு அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 15, நுங்கம்பாக்கம் (Chennai News.): சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தமிழ்நாடு-புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி நாளைய வானிலை (Tomorrow Weather) அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 40.6 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச ஈரோட்டில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்:

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தமட்டில், மேற்கு திசைக் காற்றின் வேகமாக காரணமாக, 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இரண்டு - மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியமும் ஏற்படலாம். Car Accident: கார் - டெம்போ நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி.! 

தலைநகர் சென்னை நிலை என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக வங்கக்கடல் பகுதியில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், ஒடிசா-மேற்குவங்க கடலோரப்பகுதி, மத்திய வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசும். அதேபோல, இன்று முதல் 19 ஆம் தேதி வரை அரபிக் கடலில் தென்மேற்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீசலாம் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).