Car Accident: கார் - டெம்போ நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி.!
ஆன்மீக சுற்றுலா வந்தவர்களின் டெம்போ வேனும் - உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
செப்டம்பர் 15, தேவகோட்டை (Sivaganga News.): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில், டெம்போ - கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மலேஷியாவில் இருந்து 12 பேர் குழு ஆன்மீக சுற்றுலாவுக்காக தமிழகம் வந்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் சென்றுள்ளனர். பின் அங்கிருந்து திருச்சி நோக்கி டெம்போ வேனில் பயணம் செய்துள்ளனர். Theni Shocker: 52 நாட்களே ஆகும் பச்சிளம் குழந்தை ரூ.1 இலட்சத்திற்கு விற்பனை; தந்தையின் அதிர்ச்சி செயல்.!
நால்வர் பரிதாப பலி:
இதனிடையே, இவர்களின் வாகனம் தேவகோட்டை பகுதியில் வந்தபோது, டெம்போ வேன் - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டு கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெம்ப் வேன் ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்:
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருந்தனர். விசாரணையில், விபத்தில் பலியானது தஞ்சாவூர் மாவட்டம் மாதாகோட்டை பகுதியில் வசித்து வந்த பவுல் டேனியல் (வயது 38), மகள்கள் சூரன்ரெகுமா (வயது 10), ஹெலன் சாமா (வயது 7), மைக்கேல் (வயது 63) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை, ஆண்டா ஊரணி கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக பயணித்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

