Chennai: மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தந்தை செய்த செயல்.! கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
வீட்டில் தனியாக இருந்த தந்தை அனுப்பிய குறுஞ்செய்தியை கண்ட மகன் அதிர்ந்து பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். கதவை திறந்து பார்த்தவர்களுக்கு அவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 05, சென்னை (Chennai News): சென்னை கோடம்பாக்கத்தில்(Kodambakkam) உள்ள சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 73). இவர் அதே பகுதியில் உள்ள சொந்த வீட்டில் கீழ்தளத்தில் வசித்து வந்த நிலையில், மேல்தளத்தில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், மகன் ரவிசந்தர் காட்டன்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் பாலசுப்பிரமணியின் மனைவி உயிரிழந்ததை தொடர்ந்து, மனமுடைந்த அவர் தனியாக இருந்துவந்துள்ளார். அத்துடன் அவரது மகன் தந்தைக்கு சமைத்து கொடுப்பதற்காக பெண் ஒருவரை வேலைக்கு வைத்துள்ளார். Benefits of Green Chilly: பச்சை மிளகாயில் இருக்கும் அசத்தல் நன்மைகள்; மிகப்பெரிய நோய்க்கும் தீர்வு..!
இந்த நிலையில் நேற்று அதிகாலை பாலசுப்பிரமணி தனது மகனுக்கு செல்போனில் குறுஞ்செய்தி(Message) அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த குறுஞ்செய்தியில், "தனியாக வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ந்த மகன் வீட்டின் மாடியில் வாடகைக்கு இருப்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களும் கீழ்தளத்தில் வந்து பார்க்கவே மின்விசிறியில் பாலசுப்ரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை எண்ணம் தோன்றும் பட்சத்தில் தனியாக இருப்பதை தவிர்க்குமாறு சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Aug 05, 2023 03:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

