ஆகஸ்ட் 04, ஆரோக்கியம் (Health Tips): இந்திய உணவுகள் காரம் சுவையை இயல்பாக கொண்டவை. நமது சமையலின் மூலமந்திரம் உடலின் வளர்ச்சிக்கான தந்திரம் என்பதால் உணவின் சுவையும், சேர்க்கை பொருட்களும் நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியவை.
எண்ணெயில் தொடங்கி கடுகு, உளுந்தில் இருந்து வெங்காயம், தக்காளி, நமது மண்சார்ந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, சத்துக்களை கொண்டவை.
இன்று நாம் பார்க்க இருப்பது பார்த்தால் பச்சை என்ற பசுமையை போர்த்தி, தனக்குள் எரிமலையையே வைத்திருக்கும் காரத்தின் அடையாளமான மிளகாய் தான். IND Vs WI 2023 T20I: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 இரண்டாவது ஆட்டத்தில் அதிரடி மாற்றம்; களமிறக்கப்படும் முக்கிய வீரர்.. விபரம் உள்ளே.!
நிலப்பரப்பில் இருக்கும் எரிமலை காலத்தின் ஓட்டத்தால் உயர்ந்த மலையாகி மக்களுக்கு வாழ்விடமாகி விளைநிலம் ஆனாலும், அதன் தனித்தன்மை அவற்றை சீண்டும்போது எரிமலையாய் வெளிப்பட்டு உஷ்ணத்தை வெளிப்படுத்தும்.
அதே பாணியில், பார்ப்பதற்கு பச்சை நிறத்துடன் மிளகாய் தோற்றமளித்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்ந்தாலோ அல்லது கடித்தாலோ அவற்றின் காரம் ஊரையே கூட்டி நம்மை அலற விட்டுவிடும்.
காரத்தின் சுவையை சரி செய்ய பலரும் அவசரத்தில் தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், அளவுக்கு அதிகமான கார சுவையை கட்டுப்படுத்த பால் குடிப்பதே சிறந்தது. பாலுக்கு காரத்தின் தன்மையை கட்டுப்படுத்தும் குணம் உண்டு. X Live Video: X (ட்விட்டர்) நேரலை வீடியோ சோதனை வெற்றி; எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நன்மைகள்:
பச்சை மிளகாயில் இருக்கும் நன்மைகள் அதன் காரத்தை போல ஏராளம் என்று கூறலாம். காரம் என்பதால் அதனை பலரும் ஒதுக்கினாலும், சிறிதளவு அதனை சாப்பிடுவது பெரும் நன்மையை தரும். பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, கே போன்றவை இருக்கிறது. இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
உலகளவில் புற்றுநோய் என்பது அழிக்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், அதில் இருந்து நம்மை பாதுகாக்கும். நீரழிவு நோயகளின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த மிளகாய் உதவும்.
வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக கொண்டுள்ளதால், பச்சை மிளகாய் சாப்பிட நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதில் கலோரிகள் என்பது இல்லை என்பதால், உடல் எடை எப்போதும் அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை. பச்சை மிளகாயை சாப்பிடும் பட்சத்தில் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். Nikita Dutta Vacation: மாலத்தீவில் மல்கோவா போல இளைஞர்களின் மனதை பிகினியால் வருடும் நிகிதா; கிக்கேற்றும் போட்டோவால் துடிக்கும் ரசிகர்கள்.!
பச்சை மிளகாயின் நார்சத்து உணவு செரிமானத்திற்கு பேருதவி செய்யும். ஆண்டி-பாக்டீரியல் குணம் காரணமாக சரும தொற்றுகள் சரியாகும். இரும்புசத்து குறைபாடு உடையோருக்கு சிறந்தது. சளி போன்ற பருவகால நோய்களையும் கட்டுப்படுத்தும்.
பக்கவிளைவுகள்:
அதிகளவு பச்சை மிளகாய் சாப்பிடும் பட்சத்தில் தீவிர எரிச்சல் உணர்வானது ஏற்படும். இவை வலி, வீக்கம் போன்ற பிரச்சனையை உண்டாக்கும். சிலருக்கு வயிற்று வலி, வயிற்று வலியுடன் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
அளவுக்கு அதிகமான பச்சைமிளகாய் தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். நாளொன்றுக்கு செய்யும் சாதனைகளில் நாம் இயல்பாக சேர்க்கும் பச்சை மிளகாயினை சிறிதளவு சாப்பிட்டாலே எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால், அனைத்து உணவிலும் சேர்க்கப்படும் பச்சை மிளகாயை தேடித்தேடி அதிகளவில் உண்பது கட்டாயம் பிரச்சனையை தரும்.