Railway Track (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 16, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் அமிர்த வள்ளி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மின்சார இரயிலில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம்போல தனது வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த அமிர்த வள்ளி, செல்போன் பேசியவாறு தண்டவாள பகுதிக்கு வந்துள்ளார். அச்சமயம், இவர் அலட்சியமாக தண்டவாளத்தை கடந்து இருக்கிறார். Dubai Flying Taxi Service: 2026க்குள் பயன்பாட்டிற்கு வருகிறது பறக்கும் டாக்சி.. எங்கு வரப்போகிறது..? 

Death File Pic (Photo Credit: Pixabay)

புறநகர் இரயில் மோதி சோகம்: அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி புறநகர் மின்சார இரயில் வருகை தந்தது. இரயில் நேரடியாக அமிர்தவள்ளியின் மீது மோதவே, அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாம்பரம் இரயில்வே காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.