பிப்ரவரி 15, துபாய் (Dubai): பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கான ஒப்பந்தத்தை தற்போது துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Dubai Road and Transport Authority) பறக்கும் டாக்சி சேவையை வழங்கும் ஜோபி ஏவியேஷன் (Joby Aviation) நிறுவனத்துடன் போட்டு இருக்கின்றது. இந்த ஒப்பந்தமானது ஜோபி ஏவியேஷன் நிறுவனத்தை துபாயில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு பறக்கும் டாக்சிகளை (Flying Taxi) செயல்படுத்த அனுமதிக்கும். Tandoori Baby Corn Recipe: பேபிகான் தந்தூரி.. ஒருமுறை செய்து பாருங்கள்.. அசந்து போய் விடுவீர்கள்..!
மேலும் 2026 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கின்றது. பறக்கும் டாக்சியில் விமானி உடன் சேர்த்து சுமார் 5 பேர் வரை பயணிக்க முடியும். இதன் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்காமல் வேகமாக செல்ல இயலும்.