Free Fire Game Killed: இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் ப்ரீ பயர் விளையாட்டு; 23 வயது இளைஞர் பரிதாப பலி..!
இரா-பகலாக இன்றளவில் இளைஞர்கள் ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, எந்த நேரமும் செல்போனை நோண்டியவாறு இருந்த 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏப்ரல் 05, செங்குன்றம் (Chennai News): சென்னையில் உள்ள செங்குன்றம் (Red Hills, Chennai) பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்தவர் ஹரிதரன் பௌரி (வயது 23). இவர்க்கு சொந்த ஊர் மேற்கு வங்கம் (West Bengal) மாநிலம் ஆகும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று திருவள்ளூர் மப்பேடு, மேட்டுச்சேரி பகுதியில் இருக்கும் அண்ணனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சரிவர சாப்பாடு கூட எடுத்துக்கொள்ளாமல், ஓய்வு இன்றி தொடர்ந்து பிரீ பயர் கேமை விளையாடி வந்துள்ளார். BJP MLA Jivesh Mishra: பாஜக எம்.எல்.ஏ-வை அலேக்காக தூக்கி சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றிய பாதுகாவலர்கள்.!
இந்நிலையில், திடீரென மயங்கி விழுந்த ஹரிதரனை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஹரிதரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மப்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
(The above story first appeared on LatestLY on Apr 05, 2023 09:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

