Rain Alert Tamilnadu: 10 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அடுத்த 2 நாட்களுக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Rain Alert Tamilnadu: 10 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!
Regional Meteorological Centre, Chennai

ஜூன் 20, வானிலை ஆய்வு மையம் (Chennai): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அதிகபட்ச வெப்பநிலையாக திருப்பத்தூரில் நேற்று 37.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தமட்டில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த நிலை காரணமாக,

20-ம் தேதியான இன்று வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21-ம் தேதியை பொறுத்தமட்டில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். 22-ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும்.

23-ம் தேதி மற்றும் 24-ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்ஸியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தமட்டில், வங்க கடல் பகுதியில் 20-ம் தேதியான இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வட தமிழக தென்னாந்திர கடலோர பகுதி, அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதி, இலங்கை கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் இடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும்.

அரபிக் கடலைப் பொறுத்தவரையில் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசப்படும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 20, 2023 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).