வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் டிச.31 & ஜன.01 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்படுகிறது.
டிசம்பர் 29, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி ஊத்து பகுதியில் 3 செமீ மழையும், நாலுமுக்கு, காய்ச்சி, மாஞ்சோலை பகுதியில் 1 செமீ மழையும் பெத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை கன்னியாகுமரியில் 33.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 16.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. கோவை, தஞ்சாவூர் மாவட்டத்தில் வெப்பநிலை 2 டிகிரி வரை கணிசமாக குறைந்துள்ளது. நீலகிரியில் 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை குறைந்துள்ளது. அதிகபட்சமாக கோவை, சென்னை, தர்மபுரி, நெல்லை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகம் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 29-12-2024 இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 30-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானிலை: அடுத்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு எப்படி? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
31-12-2024 அன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 01-01-2025 முதல் 04-01-2025 வரை ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் யிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். Anna University: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்; இன்று ஆளுநர் ஆர்.என் நேரில் ஆய்வு.!
மீனவர்களுக்கான எச்சரிக்கை., தமிழக கடலோரப்பகுதிகள்:
31-12-2024 முதல் 02-01-2025 வரையில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
30-12-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 31-12-2024 அன்று தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
02-01-2025 அன்று குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on Dec 29, 2024 06:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

