டிசம்பர் 28, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், " உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. உள் தமிழகத்தில் அநேக இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 9 செமீ மழையும், விழுப்புரம் வளத்தியில் 6 செமீ மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது. ஈரோடு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, தேனி, திருப்பூர், நீலகிரி, திருவாரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பரவலான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரியில் 33.6 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 15.2 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை குறைந்தும், தஞ்சாவூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, வேலூர், சென்னை, தர்மபுரி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, திருவள்ளூர், இராமநாதபுரம், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகமாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 28-12-2024 மற்றும் 29-12-2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 30-12-2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைய வானிலை (Tomorrow Weather):
31-12-2024 அன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, யின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 01-01-2025 முதல் 03-01-2025 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Vijayakant: மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரர் - கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளில் முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்.!
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Fishermen Warning):
31-12-2024 மற்றும் 01-01-2025 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.