டிசம்பர் 23, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அதிகபட்சமாக 5 செமீ மழை பெய்துள்ளது. சிவகாசி, ஏற்காடு, காங்கேயம், பேரையூர், இராஜபாளையம், எடப்பாடி, ஊத்துக்குளி, மங்களபுரம், உசிலம்பட்டி, மதுரை விமான நிலையம், பல்லடம், தூத்துக்குடி இரயில் நிலையம், வாழப்பாடி, விருதுநகர், எட்டயபுரம், காரியகோவில் அணை, ஆண்டிபட்டி, கடம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 34.5 டிகிரி செல்சியசும், ஈரோட்டில் குறைந்தபட்சமாக 17.4 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட குறைவாகவும், கோவை, திருப்பத்தூர், தஞ்சாவூர், சென்னை, தர்மபுரி, நெல்லை, சேலம், திருச்சி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இயல்ப்பை விட அதிகமாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நிலை:
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை (Weather Today) முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (23-12-2024) காலை 08:30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (24-12-2024), தென்மேற்கு
வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். BigBreaking: தண்டவாளத்தில் திடீர் விரிசல்.. 1000 பேரின் உயிர் தப்பியது.. சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி இரயில் பயணிகள் அதிர்ச்சி..!
இன்றைய வானிலை (Today Weather):
23-12-2024 இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளைய வானிலை (Tomorrow Weather):
24-12-2024 அன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 25-12-2024 அன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்
மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.26 முதல் டிச.29 வரை மழை நிலவரம்:
26-12-2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-12-2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-12-2024 மற்றும் 29-12-2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Breaking: முகத்தில் கவர், அரைநிர்வாண நிலையில் சடலமாக உதவி பேராசிரியர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!
சென்னை (Chennai Weather Today) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை (Chennai Weather Forecast) முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான 7 மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பறிலை 23-24 டிகிரி செல்சியஸை
ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
23-12-2024 முதல் 25-12-2024 வரையில் வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23-12-2024 அன்று ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24-12-2024 மற்றும் 25-12-2024 ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.