Maduravoyal College Professor Kumar Dies on 23-Dec-2024 (Photo Credit: Facebook / Pixabay)

டிசம்பர் 23, மதுரவாயல் (Chennai News): சென்னையில் உள்ள மதுரவாயல் (Maduravoyal) பகுதியில் வசித்து வருபவர் குமார் கார்வர். இவரது சொந்த ஊர் உத்திர பிரதேசம் மாநிலம் ஆகும். தற்போது சென்னை, குன்றத்தூர் (Kundrathur) பகுதியில் செயல்பட்டு வரும் சிஐடி கல்லூரியில், மெக்கானிக்கல் துறையில் உதவி பேராசிரியராக (College Professor Died) பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக மதுரவாயல் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார், தனியாக வசித்து வருகிறார்.

போனை எடுக்காத கணவர்:

குமார் கார்வாருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கும் நிலையில், அவர்கள் சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இதனிடையே, நேற்று இரவு குமாரின் மனைவி தனது கணவருக்கு நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் பலன் இல்லை. இதனால் கணவருடன் வேலை பார்த்து வரும் சோனி என்பவருக்கு தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக மதுரவாயல் காவல்துறையினருக்கு தொடர்புகொண்டு தகவலை தெரியப்படுத்தி இருக்கிறார். TN Govt Bus: பேருந்துகளை இயக்கும்போது செல்போனில் பேசினால் 29 நாட்கள் வேலை காலி; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உச்சகட்ட எச்சரிக்கை.! 

அரைநிர்வாணமாக சடலம் மீட்பு:

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீடு உள்புறமாக தாழிடப்பட்டதை உறுதி செய்தனர். பின் வீட்டின் பின்பக்கம் வழியாக கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில், அங்கு கழிவறையில் பேராசிரியர் குமார் கார்வார், அரை நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், அவரின் முகம் மற்றும் தலையில் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டு இருந்தது. பேராசிரியரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், உதவி பேராசிரியர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அவர் மரணத்திற்கு என்ன காரணம்? என விசாரணை நடந்து வருகிறது.