வானிலை: கொளுத்தப்போகும் வெயில்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. மக்களே உஷார்.!
வரும் இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை பகல் நேரங்களில் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
பிப்ரவரி 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் கரூர் பரமத்தியில் 36.5 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒரு சில பகுதிகளில் சற்று குறைவாகவும், வடதமிழகம் மற்றும் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 டிகிரி - 36.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29 டிகிரி - 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. Mayiladuthurai Double Murder: மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் கொலையில் திருப்பம்.. காரணம் என்ன? காவல்துறை விளக்கம்.!
இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், 16-02-2025 மற்றும் 17-02-2025 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 18-02-2025 முதல் 20-02-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 21-02-2025 மற்றும் 22-02-2025 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை வானிலை (Chennai Weather Update) மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):
இன்று (16-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை (17-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

