அக்டோபர் 30, சென்னை (Rain Alert Tamilnadu): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "30ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. OPPO A79 5G: ஓப்போ பிரியர்களே கொண்டாடுங்கள்.! நீங்கள் எதிர்பார்த்த A79 5G பட்ஜெட் விலையில்.. ரூ.19,999/- மட்டுமே..!! சிறப்பம்சங்கள் இதோ.!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு (அக்.30 காலை 07:00 மணிக்கு மேல் - 10 மணிக்குள்) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.