Oppo A79 5G Smartphone (Photo Credi: Oppo.com)

அக்டோபர் 27, புதுடெல்லி (Technology News): ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பயனர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் விதமாக, ஓப்போ நிறுவனத்தின் ஏ79 5ஜி (OPPO A79 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் பலரும் வாங்கும் விதமாக ரூ.19,999 க்கு இந்திய மதிப்பில் விற்பனை செய்யபடுகிறது. இன்றைய தலைமுறைக்கேற்ப, 5G நெட்ஒர்க் வசதியை பயன்படுத்தும் பொருட்டு 5G நெட்ஒர்க் சேவை வசதியுடன் ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது.

இதனைத்தவிர்த்து, பக்கவாட்டு பகுதியில் உள்ள Fingerprint வசதி, மீடியா டெக் ப்ராசசர், 50MP கேமிரா உட்பட பல அம்சங்கள் ஓப்போ ஏ79 5ஜி ஸ்மார்ட்போனை தரம் உயர்த்தி இருக்கிறது. தற்போதைய அளவில் க்ரீன் மற்றும் மிஸ்டிக் பிளாக் ஆகிய நிறங்களில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Oppo A79 5G (Photo Credit: Oppo.com)

நேற்று இந்தியாவில் அதிகாரபூர்வமாக இதன் விற்பனையும் தொடங்கப்பட்டு, அந்நிறுவனத்தால் விலை ரூ.19,999/- என அறிவிக்கப்பட்டுள்ளது. Pregnant Women Health Tips: கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?.. கர்ப்பிணிகளே தெரிஞ்சிக்கோங்க.! 

சிறப்பம்சங்கள்:

6.7 இன்ச் (17.06 செ.மீ) FHD+ டிஸ்பிளே, 2400x1080 ரிசொல்யுஷன், 90Hz புதுப்பிப்பு திறன் (Refresh Rate), LCD 680 Nits Brightness, டிஸ்பிளேக்கு பாண்டா கிளாஸ் பாதுகாப்பு, 8GB RAM, 128 GB ஸ்டோரேஜ், 5,000 mAh பேட்டரி திறன், 33W SUPERVOOC சார்ஜர் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

அதேபோல, 50MP பிரைமரி கேமிரா, 2MP செகண்டரி கேமிரா, 8MP முன்பக்க கேமிரா, 1080p & 720p தரத்துடன் Slow Motion விடீயோக்களை படம்பிடிக்கும் திறனும் உள்ளது. தீபாவளி கொண்டாட்டமாக தற்போது இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஓப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.