வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

வானிலை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Tomorrow Weather (Photo Credit: LatestLY)

ஜூன் 01, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 37.7° செல்சியசும்,

குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 22.0° செல்சியசும் பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather ):

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 01-06-2025 முதல் 07-06-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Blade Found in Soap: குளியல் சோப்பில் கிடந்த பிளேடு.. நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. பெற்றோர்களே உஷார்.! 

சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):

இன்று (01-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (02-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று 01-06-2025 முதல் 05-06-2025 வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

இன்று (01-06-2025) மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடகிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

இன்று (01-06-2025) தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல், வடகிழக்கு அரபிக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், கர்நாடக-கேரள கடலோரப்பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Jun 01, 2025 02:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).