Blade Found in Soap (Photo Credit : @mpnewstv X)

மே 30, குவாலியர் (Madhya Pradesh News): நாம் வாங்கும் உணவுப்பொருட்களில் ஒரு சிலநேரம் ஈக்கள், பூச்சி போன்றவை இருப்பது அதிகம் நடக்கின்றன. சமீபத்தில் கூட சென்னையில் போபா டீயில் கண்ணாடி துண்டு கிடந்து, நல்வாய்ப்பாக அதனை அருந்திய சிறுமி உயிருக்கு ஆபத்தின்றி உயிர் பிழைத்தார். உணவு தயாரிக்கும் முறையில் நடக்கும் அலட்சியத்தால் இது போன்ற நிலையை பலரும் எதிர்கொண்டிருக்கும் நிலையில், சோப்பு ஒன்றில் மறைந்திருந்த பிளேடு சிறுவனின் உயிருக்கு எமனாக அமைந்ததன் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திடீரென கன்னத்தில் இருந்து கொட்டிய ரத்தம் :

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில் 10 வயது சிறுவன் குளித்த போது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவாலியரில் உள்ள ஆனந்த் நகரில் வசித்து வரும் தம்பதியின் 10 வயது சிறுவன் குளிக்க சென்றுள்ளார். அப்போது டெட்டால் சோப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுவன் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென கன்னத்தில் ரத்தப்போக்கு ஏற்படவே அதிர்ச்சியடைந்தவர் தனது பெற்றோரை அழைத்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். லிப்டில் சிக்கிக்கொண்ட மகன்.. பயத்தில் தந்தை மாரடைப்பால் பலி.., சோக சம்பவம்..!

சோப்பில் இருந்த பிளேடு துண்டு :

மேலும் சோப்பை பார்த்த போது அதில் ஒரு பிளேடு துண்டு மறைந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த விஷயத்தை வீடியோ ஆவணமாக பதிவு செய்து கொண்ட தந்தை தற்போது நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஆனந்த நகரில் வசித்து வரும் அங்கத் சிங் தோமர் என்பவர் தனது வீட்டின் அருகில் உள்ள கடையிலிருந்து ரூ.10 மதிப்புள்ள டெட்டால் சோப்பை வாங்கி வந்துள்ளார்.

நுகர்வோர் நீதிமன்றத்தில் தந்தை புகார் :

இவரின் மகன் அன்ஷ் (வயது 10) குளித்த போது அவரது கன்னத்தில் வெட்டுப்பட்டு திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. சோப்பை சரியாக பார்த்தபோது அதில் பிளேடு இருந்தது தெரிய வந்ததால் தற்போது நுகர்வோர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இனி எந்த பொருளை கடையில் வாங்கினாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை சரியாக பார்த்த பின்னரே அதனை உபயோகிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சோப்பில் இருந்த பிளேடு துண்டு குறித்து தந்தையின் வாக்குமூல வீடியோ: