வானிலை: மழையா? வெயிலா?.. அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் இதோ.!

அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை: மழையா? வெயிலா?.. அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் இதோ.!
Tomorrow Weather (Photo Credit: LatestLY)

ஜூன் 20, நுங்கம்பாக்கம் (Weather News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையம், மதுரை நகரம், கடலூர், பரங்கிபேட்டை மற்றும் திருச்சி விமான நிலையம் ஆகிய இடங்களில் 38 முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஏழு தினங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Actor Arya: நடிகர் ஆர்யாவின் வீடு, ஹோட்டலில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.!

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரையில் ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று (ஜூன் 20) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (ஜூன் 21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று (ஜூன் 20) வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Jun 20, 2025 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).