
ஜூன் 20, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆர்யா. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் தொடங்கிய ஆர்யாவின் திரைப்பயணம் பட்டியல், வட்டாரம், ஓரம்போ ஆகிய படங்களில் சிறப்பு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து நான் கடவுள் திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் கவனத்தையும் பெற்று இருந்தார். இதனையடுத்து மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, அவன் இவன், ஆரம்பம், பெங்களூர் நாட்கள், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் நடித்து அடையாளமும் பெற்றுள்ளார். YouTuber Vishnu Arrested: மனைவியின் பரபரப்பு புகார்.. பிரபல தமிழ் யூடியூபர் கைது..!
நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை :
இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான உணவகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்த சோதனை நடந்து வந்தது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் ஆர்யா தொடர்பில் இருந்ததாகவும், இது தொடர்பாக நடந்த விசாரணையின் பெயரில் ஆர்யாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் (Income Tax Raid) சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இரண்டு நாட்களாக நடந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மேற்படி தகவல் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.