வானிலை: தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை.. ஆட்டத்தை துவங்கும் வருண பகவான்.!

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை (Weather) குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

வானிலை: தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை.. ஆட்டத்தை துவங்கும் வருண பகவான்.!
Tamilnadu Rains File Pic (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 06, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தென்மேற்கு பருவ மழை டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 39.0° செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 19.5° செல்சியசும் பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather) :

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (06-08-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை.. "சட்டம் ஒழுங்கு எங்கே?" - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்.! 

நாளைய வானிலை - மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் : (Tomorrow Weather) :

நாளை (07-08-2025) வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

  • கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்
  • நீலகிரி
  • விழுப்புரம்
  • செங்கல்பட்டு
  • திருவண்ணாமலை
  • திருப்பத்தூர்
  • வேலூர்
  • ராணிபேட்டை

ஆகஸ்ட் 08 மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

நாளை மறுநாள் (08-08-2025) வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

  • கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்
  • நீலகிரி
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • கடலூர்
  • திருவண்ணாமலை
  • கிருஷ்ணகிரி
  • தர்மபுரி
  • திருப்பத்தூர்
  • சேலம்

ஆகஸ்ட் 09 மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

09-08-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • விழுப்புரம்
  • கடலூர்
  • செங்கல்பட்டு
  • கள்ளக்குறிச்சி
  • திருவண்ணாமலை

ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 12 வரை மழைக்கு வாய்ப்பு :

10-08-2025 முதல் 12-08-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather) :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று (06-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (07-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகள் :

இன்று 06-08-2025 தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் :

இன்று 06-08-2025 தெற்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் :

இன்று 06-08-2025 மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள் கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Aug 06, 2025 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).