வானிலை: இன்று 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது. மழை சூழல் காரணமாக மக்கள் எந்நேரமும் தயார் நிலையில் தங்களுடன் குடைகளை எடுத்துவிட்டு வெளியே செல்வது நல்லது. தொடர்ந்து வானிலை தகவலைப் பெற எங்களுடன் இணைந்திருக்கவும்.

வானிலை: இன்று 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 08, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ பொதுவாக அநேக இடங்களில்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதியில்‌ மழை பெய்துள்ளது. புதுவையில்‌ மிக லேசான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்‌ நீலகிரி, திருவள்ளூர், கடலூர், சேலம், கோவை, சென்னை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், இராமநாதபுரம், ஈரோடு, நாமக்கல், தூத்துக்குடி, பெரம்பலூர், திண்டுக்கல், திருப்பூர், வேலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருச்சி, குமரி, சிவகங்கை, காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை (Weather Forecast Tamilnadu) முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், லட்சத்தீவு, கேரளா மற்றும்‌ வடதமிழக பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

08.10.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌ மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மாவட்ட அளவிலான வளர்ச்சிப்பணிகள், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. விபரம் உள்ளே.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

09.10.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌ மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10 & 11 ம் தேதிகளில் எங்கெங்கு மழை?

10.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருநெல்வேலி, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, இண்டுக்கல்‌, நீலகிரி, மதுரை, விருதுநகர்‌, சேலம்‌, நாமக்கல்‌, திருச்சராப்பள்ளி மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக். 12ம் தேதி 21 மாவட்டங்களில் கனமழை:

12.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, இராமநாதபுரம்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டங்களில்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.13ல் 21 மாவட்டங்களில் கனமழை:

13.10.2024 அன்று தமிழகத்துல்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, இராமநாதபுரம்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டங்களில்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Job Alert: மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம்; உடனே பகிருங்கள்.. விபரம் உள்ளே.! 

குமரி, மதுரை, திண்டுக்கல் உட்பட 13 மாவட்டங்களில் அக்.14 அன்று மழை:

14.10.2024 அன்று தமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌, சிவகங்கை, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Weather Alert in Chennai):

சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்‌சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26.5 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

08.10.2024 முதல்‌ 12.10.2024 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌, மத்திய மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், கேர்ளா-கர்நாடக கடலோரப்பகுதி, இலட்சத்தீவு பகுதி, மாலத்தீவு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Oct 08, 2024 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).