வானிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; வெளுத்துவாங்கப்போகும் கனமழை.! விபரம் உள்ளே.!

இடி-மின்னலுடன் வரும் 5 நாட்களில் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இன்று முதலாகவே வரும் நாட்களில் மழைக்கான சாதக சூழல் நிலவுகிறது.

வானிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; வெளுத்துவாங்கப்போகும் கனமழை.! விபரம் உள்ளே.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 01, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் பொதுவாக ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை, நீலகிரி, கடலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோடு மாவட்டத்தில் 36.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 19.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை (Tamilnadu Weather Update) முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று எங்கெல்லாம் மழை?

ஒன்றாம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம். சேலம் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

அக்.2 அன்று மழை நிலவரம் - நாளைய வானிலை:

இரண்டாம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

அக்.3 ம் தேதி அன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்:

மூன்றாம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. "50 ஆண்டுகளில் சாப்பிட அரிசி கிடைக்காது" - மதுரை கிளை நீதிபதிகள் வேதனை.. சிவகங்கை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை.! 

அக்.4ம் தேதி மழைக்கு சாதகமான இடங்கள்:

நான்காம் தேதியில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.5ம் தேதி மழைக்கு சாதகமான சூழல் உள்ள இடங்கள்:

ஐந்தாம் தேதியில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானிலை எப்படி?

ஆறாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.

மீனவர்கள் கவனம்:

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மன்னார்குளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, குமரிக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இன்று கேரள கடலோரப்பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு, அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Oct 01, 2024 03:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).