Kavery River Water Project | HC Bench Madurai (Photo Credit: @tirunelveli_bjp / @Thiyaga45909539 X)

அக்டோபர் 01, மதுரை (Madurai News): திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விருமாண்டி என்பவர், மதுரை உயர்நீதிமன்ற (Madurai High Court Bench) கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில், "மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவேரி நீர் கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாய்கிறது. காவேரி நதிநீரை மட்டும் நம்பியே கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். அம்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் அதுதான். இங்கு ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. Tenkasi: சல்லாப இளைஞர்களே உஷார்.. டேட்டிங் செயலியில் ஆசையாக பேசி ஆப்படித்த கும்பல்.. 9 பேர் கைது.! தென்காசியில் அதிர்ச்சி.! 

மனுவில் உள்ள முக்கிய கோரிக்கை என்ன?

திருச்சி மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகள் வாயிலாக திருச்சி மாவட்டம் பலன்பெறுகிறது. ஆனால், மழை இல்லாமல் நீர் ஆற்றில் இல்லாதபோது, மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்று வருகிறது. கடந்த 2022 ம் ஆண்டில் காவேரி ஆற்றில் இருந்து சிவகங்கைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல, கரூர் மாவட்டத்தில் உள்ள உமையாள்புரம், மருதூர் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். அந்த தடுப்பணையை கட்டிவிட்டே, சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டப்பணிகளை தொடங்க வேண்டும்" என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள காட்டவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு பின் சாப்பிட அரிசி கூட கிடைக்காது:

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி சுப்பிரமணியம் அமர்வில், இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசுத்தரப்பில் வாதிடப்படும்போது, "மேற்கூறிய திட்டத்திற்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தால், மக்கள் பாதிக்கப்படுவார்கள்" என கூறப்பட்டுள்ளது. இதனை குறித்துக்கொண்ட நீதிபதிகள், "சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விவசாயிகள் மனிதர்கள் இல்லையா?. இந்நிலை தொடர்ந்தால் 50 ஆண்டுகளுக்கு பின் சாப்பிட அரிசி கிடைக்காது. ஏற்கனவே தெலுங்கானா, மஹாராஷ்டிரா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து தான் தமிழ்நாட்டில் சாப்பிடுவதற்கான அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான மோசமான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தலைமை செயலாளர் பதில் அளிக்க வேண்டும்" என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.