வானிலை: இடி-மின்னலுடன் கனமழை முதல் மிககனமழை; வெளுத்துவாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

கடந்த 24 மணி நேரத்‌தில்‌ மேற்கு மலைத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்று பரவலாக 13 மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை: இடி-மின்னலுடன் கனமழை முதல் மிககனமழை; வெளுத்துவாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 07, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ பொதுவாக ஓரிரு இடங்களில்‌ (தென்தமிழகத்தில்‌ ஒருல இடங்களிலும்‌, வடதமிழகத்துல்‌ ஓரிரு இடங்களிலும்‌) மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்‌தில்‌ கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை, திருப்பூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கோயம்புத்தூர், தென்காசி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரில் 36 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும், ஈரோட்டில் 19.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு நிலவரம் (Weather Forecast) மற்றும்‌ எச்சரிக்கையை பொறுத்தவரையில், கேரளா மற்றும்‌ தென்தமிழகத்தின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

07.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிககனமழையும்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌,

மயிலாடுதுறை மற்றும்‌ கடலூர்‌ மாவட்டங்களில்‌, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

08.10.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. திருநெல்வேலி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, நீலகிரி, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, விருதுநகர்‌ மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Bomb Threat: கோவை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மின்னஞ்சலில் வந்த பகீர் எச்சரிக்கை.! 

அக்.9 மற்றும் 10ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

09.10.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுஇகள்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, விருதுநகர்‌, கன்னியாகுமரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 10.10.2024 அன்று தமிழகத்இல்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிககனமழையும்‌, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர்‌ மற்றும்‌ நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.11 மற்றும் 12ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:

11.10.2024 அன்று தமிழகத்துல்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும்‌ தஞ்சாவூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிககனமழையும்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம்‌, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மற்றும்‌ கடலூர்‌ மாவட்டங்களில்‌, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12.10.2024: தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி மாவட்ட மலைப்பகுதிகள்‌, கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிககனமழையும்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, நீலகிரி, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும்‌ ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.13 & 14ல் மழை நிலவரம்:

13.10.2024: தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும்‌ நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும்‌ புறநகர் (Chennai Weather Report) பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35” செல்‌சியஸை ஓட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

07.10.2024 முதல் 11.10.2024 வரை தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதி, தென்தமிழக கடலோரப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல்‌, கேரள கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகள்‌, மாலத்தீவு பகுதிகள்‌, தென்‌கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வரும் 5 நாட்களில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. வரும் 5 நாட்களுக்கு மழை தொடரும். மேலும், அடுத்த 7 நாட்களுக்கு பரவலான இடங்களில் தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

(The above story first appeared on LatestLY on Oct 07, 2024 02:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).