வானிலை: இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; நாளைய வானிலை நிலவரம்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, கரூர்‌ உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை: இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; நாளைய வானிலை நிலவரம்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

டிசம்பர் 03, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில்‌ வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வடதமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, தென்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ மழை பெய்துள்ளது. புதுவையில்‌ லேசான மழை பஇவாகியுள்ளது. காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ கரூர் தோகமலையில் 13 செமீ, கரூர் கிருஷ்ணராயபுரம், ராணிப்பேட்டை சோளிங்கர், திருப்பத்தூர், சேலம் ஏற்காடு பகுதிகளில் தலா 10 செமீ அதிகபட்சமாக மழை பெய்துள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், நேற்று (02-12-2024) காலை, வடதமிழக உள்‌ பகுதிகளில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும்‌ தெற்கு கர்நாடக உள்‌ பகுதிகளில்‌ நிலவியது. இது இன்று (03-12-2024) காலை, கடலோர கர்நாடக பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு

பகுதியாக நிலவுகிறது. 03-12-2024 இன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதுகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Who Is Venkata Datta Sai? பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து திருமணம்; யார் அந்த அதிஷ்டசாலி வேங்கட தத்தா? விபரம் இதோ.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

04-12-2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 05-12-2024 முதல்‌ 09-12-2024 வரையில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை (Chennai Weather Today) மற்றும்‌ புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

சென்னையில் நாளைய வானிலை (Chennai Tomorrow Weather):

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்‌சியஸை ஓட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

03-12-2024 இன்று கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்‌, லட்சத்‌தீவு பகுதிகள்‌, அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்தியகிழக்கு அரபிக்கடலின்‌ தெற்கு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

04-12-2024 அன்று லட்சத்‌தீவு பகுதிகள்‌, அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்தியகிழக்கு அரபிக்கடலின்‌ தெற்கு பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

(The above story first appeared on LatestLY on Dec 03, 2024 02:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).