டிசம்பர் 03, புதுடெல்லி (Sports News): புருசலா வேங்கட சிந்து என்ற இயற்பெயரை கொண்ட பிவி சிந்து (PV Sindhu), இந்தியாவின் பிரபலமான பேட்மிட்டன் வீராங்கனை ஆவார். ஒலிம்பிக், உலக சேம்பியன்ஸ், காமன் வெல்த் கேம்ஸ், ஏசியன் கேம்ஸ் என பல விளையாட்டு பிரிவுகளில் தங்கம், வெள்ளி என பல வெற்றிகளை கண்டிருக்கிறார். 29 வயதாகும் பிவி சிந்து, உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பேட்மிட்டன் வீராங்கணையாகவும் இருக்கிறார். Jay Shah: ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா பதவியேற்பு..!
டிசம்பர் 22 அன்று திருமணம்:
இதனிடையே, பிவி சிந்துவுக்கும் - தொழில்நுட்ப வல்லுனரான வேங்கட தத்தா சாய்க்கும் திருமணம் வரும் 22 டிசம்பர் 2024 அன்று திருமணம் நடைபெற்று முடிகிறது. இதற்கான ஏற்பாடுகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூரில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதம் 2025ல் சிந்து தனது அடுத்தகட்ட போட்டிக்காக தயாராகவுள்ள நிலையில், அதனை முன்கூட்டியே திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் 24 டிசம்பர் 2024 அன்று ஹைத்ராபாத்தில் நடக்கிறது.
யார் இந்த வேங்கட தத்தா (Venkata Datta Sai)?
சிந்துவின் வருங்கால கணவரான வேங்கட தத்தா சாய், போஸிடெக்ஸ் டெக்னலாஜி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். வேங்கட தத்தா போஸிடெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜிடி வெங்கடேஸ்வரா ராவின் மகன் ஆவார். வேங்கட தத்தா லிபரல் ஆர்ட்ஸ் சயின்ஸ், ஸ்டெடடிஸ் டிப்ளமோ பயின்றுள்ளார். கடந்த 2018ல் பிளேம் பல்கலை.,யில் இளங்கலை வணிக நிர்வாகத்துறையில் பிபிஏ, கணக்கியல் படிப்பையும் பயின்று, பின் பெங்களூரில் இருக்கும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனத்தில் தரவு அறிவியல் பயின்றுள்ளார்.
டிசம்பர் 22ல் பிவி சிந்து - வேங்கட தட்டா திருமணம்:
PV Sindhu is set to be married on Dec 22 in Udaipur
She will marry Hyderabad-based businessmen Venkata Datta Sai, Executive Director of Posidex Technologies.
Huge congratulations to both of them ✨ pic.twitter.com/JVz4O8szGJ
— The Khel India (@TheKhelIndia) December 2, 2024