Gold Rate Today: படிப்படியாக எகிறும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலை 02, சென்னை (Gold Price Today): ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு (Gold Investment) செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) இன்று சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது. Chennai News: 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு எஸ்.ஐ அதிர்ச்சி செயல்.. சென்னையில் பரபரப்பு.!
எகிறும் தங்கம் :
சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
ஜூலை 02ஆம் தேதியான இன்று புதன்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 02) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,065க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000 க்கு விற்பனையாகிறது.
(The above story first appeared on LatestLY on Jul 02, 2025 09:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

