Sexual Harassment & Minor Abuse (Photo Credit: Pixabay)

ஜூலை 01, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் ராஜி. சம்பவத்தன்று அங்குள்ள பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமி மாலை 6 மணிக்குமேல் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி இருக்கிறார். இதனால் அவரை தேடியலைந்த குடும்பத்தினர், சிறுமியின் தோழி ஒருவர் கொடுத்த தகவலின் பெயரில் அங்குள்ள பகுதியில் ஆண், பெண் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று தேடியுள்ளனர். அப்போது குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது.

சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை :

உடனடியாக சிறுமியை மீட்ட குடும்பத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது, பரிசோதனையில் சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதும் உறுதியானது. அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜி என்பது தெரியவந்ததால், இரவு நேரத்தில் காவல்நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்ட குடும்பத்தினர் காவல் உதவி ஆய்வாளரை அடிக்கப் பயந்தனர். இளைஞரை பிரம்பால் தாக்கிய போலீசார்.. சிவகங்கை லாக்கப் மரணத்தில் பகீர் வீடியோ.! 

எஸ்.ஐ மீது போக்ஸோ வழக்கு

இதனையடுத்து இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் தற்போது காவலர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர் விசாரணை நடந்துவரும் நிலையில், எதற்காக சிறுமியை அவர் அழைத்துச் சென்றார்?, மயக்க மருந்து கொடுக்கப்பட்டது ஏன்?, பாலியல் தொல்லை மட்டும் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் கடத்தல் செயலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.