Gold Rate Today: படிப்படியாக உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate Today: படிப்படியாக உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜூலை 08, சென்னை (Gold Price Today): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்கள் என பல காரணத்தால் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை (Gold Price) சவரனுக்கு ரூ.74,000ஐ கடந்திருந்தது. Breaking: கடலூரில் இரயில் - பள்ளி பேருந்து மோதி பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. 4 பேர் படுகாயம்.. கேட் கீப்பரால் நேர்ந்த சோகம்.! 

மீண்டும் குறையும் தங்கம் விலை :

சவரன் தங்கம் விலை அதன் உற்பத்தி, நுகர்வு உட்பட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு தினமும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பங்குச்சந்தை நிலவரத்தை பொருத்தும் தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்திலேயே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

ஜூலை 08ஆம் தேதியான இன்று செவ்வாய்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (ஜூலை 08) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,060க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000 க்கு விற்பனையாகிறது. நேற்றைய தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று ரூ.400 உயர்ந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 08, 2025 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).