ஜூலை 08, செம்மங்குப்பம் (Cuddalore News): கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இன்று பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. செம்மங்குப்பம் பகுதி ரயில்வே கேட் வழியாக தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன், பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போது காலை 7.45 மணியளவில் விபத்து நடந்துள்ளது. ரயில் வருவதை அறிந்து கேட்டை பூட்டாததன் காரணமாக ரயில் தொடர்ந்து வந்த நிலையில், இதனை அறியாத பள்ளி பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுக பிரமுகரின் பேண்டில் கைவைத்த ஆசாமிகள்.. சுற்றுப்பயணத்தில் பரபரப்பு.!
50 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி வாகனம் :
விபத்தில் சிக்கிய பேருந்து 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு மோதல் நிகழ்ந்துள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து குழந்தைகளின் நிலைமைகளை கேட்டறிந்து வருகின்றனர். மேலும் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதற்கு கேட் கீப்பரே காரணம் என ஆத்திரமடைந்த மக்கள், அவரை சிறைபிடித்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
2 மாணவர்கள் பரிதாப மரணம் :
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, கேட் கீப்பரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி தலைமையிலான காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் குவிந்துள்ளனர். விபத்திற்குள்ளான வேனில் 5 பேர் மட்டுமே இருந்ததால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த விபத்தில் 6 ஆம் வகுப்பு பயிலும் நிவாஸ், 11ஆம் வகுப்பு பயிலும் சாருமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி படுகாயம் :
இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதை கண்டு அதிர்ந்த அண்ணாதுரை என்பவர் உடனடியாக மீட்பு பணிக்கு சென்ற நிலையில் அவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். தற்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான வீடியோ :
#WATCH | Tamil Nadu | School bus crossing railway tracks hit by train in Sembankuppam, Cuddalore District
Details awaited. pic.twitter.com/uk6vYz6hhf
— ANI (@ANI) July 8, 2025