Velachery North Indian Murder: வேளச்சேரியில் வடமாநில இளைஞருடன் சென்னை சிறார்கள் மோதல்.. 7 பேர் கும்பலால் பிழைக்க வந்த தொழிலாளி அடித்தே கொலை.!
சாலையில் நடந்து வரும்போது சென்னை சிறார்களுக்கு, வடமாநில இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதல் அப்பாவி இளைஞரை பிணமாக்கிய பயங்கரம் நடந்துள்ளது.
பிப்ரவரி 04, சென்னை: ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் மண்டல் (வயது 27), வேளச்சேரி (Velachery, Chennai) வி.ஜி.பி செல்வா நகரில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் (Mason) கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார். கடந்த ஜனவரி 27ல் நண்பர்களோடு சாலையில் வந்துகொண்டு இருந்துள்ளார். அச்சமயம் பெருங்குடி (Perungudi), கல்லலுக்குட்டையை சேர்ந்த 5 சிறுவர்கள் மீது இவர்கள் மோதினர். இதனால் அங்கு இருதரப்பு மோதல் ஏற்பட, சிறார்களை ரமேஷ் மண்டல் மற்றும் அவரின் நண்பர்கள் தாக்கியுள்ளனர். அடிவாங்கிய சிறார்கள் வடமாநில இளைஞர்கள் தங்களை தாக்கியதாக உடன் 4 பேரை அழைத்து வந்து சண்டை செய்துள்ளான். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மண்டல் உயிரிழக்கவே, வேளச்சேரி காவல் துறையினர் கல்லுக்குட்டையை சேர்ந்த ஹரிஹரன் (வயது 20), கோகுல் (வயது 19) உட்பட 7 சிறார்களை கைது செய்தனர். Rohini Theatre Employee Died: மக்களின் பயன்பாட்டிற்கு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஒருவாரமாக செத்து மிதந்த ஆணின் சடலம்.. ரோகினி திரையரங்கில் பகீர்.!
வேளச்சேரியில் சாலையில் குழுவாக நடந்துசென்றபோது ஏற்பட்ட தகராறில் 27 வயது வடமாநில இளைஞர் படுகொலை..
கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் உட்பட 7 சிறார்கள் காவல்துறையினரால் கைது..#Velachery | #Chennai | #Murder
PC: Representation - PTI pic.twitter.com/UuW0JCOuHg
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 04, 2023 08:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

