Baby Died: தண்ணீர் பத்திரத்திற்குள் விழுந்து ஒருவயது பச்சிளம் குழந்தை பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்..!

ஒருவயது பச்சிளம் குழந்தை குளியலறை அருகே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்து பலியான சோகம் நடந்துள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Baby Died: தண்ணீர் பத்திரத்திற்குள் விழுந்து ஒருவயது பச்சிளம் குழந்தை பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்..!
Baby Elamaran / Bucket Template

ஜனவரி 15, விருகம்பாக்கம்: சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் (Virugambakkam, Chennai), வியாபாரிகள் சங்கப்பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இளமாறன் என்ற ஒருவயது மகன் இருக்கிறார்.

இந்நிலையில், இன்று குழந்தை வீட்டில் இருக்கும் குளியலறை அருகே விளையாடிக்கொண்டு (Child Boy Died Slip Bucket Water) இருந்ததாக தெரியவருகிறது. அப்போது, குழந்தை எதிர்பாராத விதமாக தண்ணீர் பக்கெட்டுக்குள் விழுந்துள்ளது. Avaniyapuram Jallikattu 2023: விமர்சையாக நடைபெற்று முடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்ற காளையர்கள் இவர்கள்தான்..!

குழந்தை மயக்க நிலையில் தண்ணீர் பக்கெட்டுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், மகனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 15, 2023 09:46 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 15, 2023 09:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).