Minor Boy Murder: தாயின் கள்ளக்காதலை கைவிடவைத்த சிறுவன் குத்திக்கொலை... வீட்டு வாசலில் நடந்த பயங்கரம்..!
குடிகார கணவனால் மனதுடைந்த பெண்மணிக்கு உதவுவதுபோல உதவி அவரை கள்ளக்காதலியாக்கிய நபர், இறுதியில் பெண்ணின் மகனை குத்தி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தாயை நல்வழிப்படுத்திய 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஏப்ரல் 12 , விருகம்பாக்கம் (Virugambakkam): சென்னையில் உள்ள விருகம்பாக்கம் (Virugambakkam, Chennai) தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் (38 வயது). இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இளஞ்செழியனின் மனைவி தனலட்சுமி. தம்பதிகளுக்கு 17 வயதுடைய மதன் குமார் என்ற மகனும், 16 வயதில் மற்றொரு மகனும் இருக்கின்றனர். இவர்களில் மதன் குமார் வேளச்சேரி (Velachery) அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறார்.
புளியந்தோப்பு (Puliyantope) பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தனலட்சுமி வேலைபார்த்து வந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான இளஞ்செழியன் எந்நேரமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குடும்பத்தாரிடையே தகராறு செய்வதையே வாடிக்கையாக்கி இருக்கிறார். இதனால் தனலட்சுமியின் வாழ்க்கை நிம்மதியின்றி சென்றுள்ளது.
இதற்கிடையில், தனலட்சுமியுடன் வேலை பார்த்து வந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் முதலில் நண்பராக பழகி வந்துள்ளார். அவரிடம் தனலட்சுமி தான் படும் துயரங்களை கூற, அவரோ இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க உதவி செய்திருக்கிறார். இதற்குள்ளாக தனலட்சுமி - கார்த்திக் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கார்த்திக்குக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்தாலும், வேளச்சேரியில் தனிவீடு எடுத்து தனலட்சுமியை தங்க வைத்து இருக்கிறார். தனலட்சுமி தனது பிள்ளைகளோடு தங்கியிருந்து, அவ்வப்போது கார்த்திக்குடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இளஞ்செழியன் போதை மறுவாழ்வு மையத்தால் திருந்தி வீட்டிற்கு வந்துள்ளார். Tirunelveli Murder: மருமகளை கொலை செய்து தியேட்டரில் படம் பார்த்த மாமனார்; சொத்துக்காக நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொலை.!
அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைந்து, பின்னர் வேளச்சேரியில் இருப்பதை அறிந்து மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வந்துள்ளார். இதனால் மீண்டும் தனலட்சுமி தனது பிள்ளைகளுடன் விருகம்பாக்கத்திற்கு வந்து கணவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். தனலட்சுமியின் பிள்ளைகளும் தந்தை திருந்தி வந்ததால் தாயை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தியும் இருக்கின்றனர்.
கள்ளக்காதலி பிரிந்து சென்ற சோகத்தில் வருத்தத்தில் இருந்த கார்த்திக், சம்பவத்தன்று கள்ளக்காதலியை நேரில் பார்க்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனலட்சுமியின் வீட்டு கதவை தட்டவே, மதன் குமார் வந்து கதவை திறந்துள்ளார். சிறுவனை கண்டதும் ஆத்திரமடைந்த கார்த்திக், தான் எடுத்து வந்த கத்தியால் சிறுவனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மதன் குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Apr 12, 2023 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

