Coimbatore Crime: கல்லூரி தோழியாக தாலிகட்டிய மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

காதலித்து திருமணம் செய்த இளம்பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட பயங்கரம் கோவை மாநகரை அதிரவைத்துள்ளது.

Coimbatore Crime: கல்லூரி தோழியாக தாலிகட்டிய மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Accuse Sanjay's Mother & Accuse Sanjay (Source)

ஜூன் 01, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாநகரை சேர்ந்தவர் சஞ்சய். செல்வபுரம் பக்தியை சேர்ந்த இளம்பெண் ரமணி (வயது 20). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டின் எதிர்ப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சமீபத்தில் (மே 06, 2023) அன்று திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கிடையில், சஞ்சய் அவ்வப்போது தனது கல்லூரி தோழியான இளம்பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் ரமணி கணவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இதுதொடர்பாக இருவருக்குள்ளும் பிரச்சனை நடந்துள்ளது. Hidden Strike 2023: அட்டகாசமாக வெளியானது ஜாக்கி சான் – ஜான் சீனாவின் ஆக்சன்-காமெடி ஹிட்டன் ஸ்ட்ரைக் படத்தின் டிரைலர்..!

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது மனைவி ரமணியை கீழே தள்ளி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என ரமணியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரமணி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, சஞ்சய் மற்றும் அவரின் பெற்றோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Jun 01, 2023 01:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).