Go Glam Sales Fair: கோடை கால விடுமுறையை முன்னிட்டு கோ கிளாம் விற்பனை கண்காட்சி.. கோவை மக்கள் மகிழ்ச்சி..!

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள ரெசடென்சி ஓட்டல் அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

Go Glam Sales Fair (Photo Credit: @backiya28 X)

மே 13, கோவை (Coimbatore News): கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி (Go Glam) தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில் கோடை கால விடுமுறை சிறப்பு விற்பனை கண்காட்சியாக கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் கோ கிளாம் தமது விற்பனை கண்காட்சியை மே 10,11,12 ந்தேதி என மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன.

முன்னதாக, கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, ஆனந்தாஸ் ஓட்டல் குழுமங்கள் சஹானா பிம், நியோலின், ஹாங்காங் குஷ்பூ, கோவையை சேர்ந்த சாந்தி சதீஷ், வைஸ்மேன் குழுமம் கீதா, ஸ்பீடு லைன் குழுமத்தின் சுவாதி தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர். Reels Video Tragedy: அதிவேகத்தில் காரில் உற்சாக பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து நண்பர்கள் இருவர் பலி., 3 பேர் படுகாயம்.!

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில், கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியாக துவங்கப்பட்டுள்ளதாகவும், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கண்காட்சியில், கோடை காலங்களுக்கு ஏற்ற காட்டன் துணி வகைகள், கொல்கத்தா, லூதியானா, குஜராத், டில்லி, ஜெய்ப்பூர், புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக ஆடை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள், பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல், வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், பெண்கள் பயன்படுத்தும் இயற்கை முறையிலான அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றிற்கு தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement