South Africa Bus Accident (Photo Credit: @ZBCNewsonline X)

அக்டோபர் 13, ஜோகன்னஸ்பர்க் (World News): தென்னாப்பிரிக்க நாட்டில், என்1 நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில், 42 ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையின் ஒரு மலைப் பகுதி வழியாக பேருந்து நேற்று (அக்டோபர் 12) இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, செங்குத்தான மலைப்பாதையில் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து (Bus Accident) விபத்துக்குள்ளானது. Eathquake Today: 7.8 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பேரழிவுக்கு நாள் குறிக்கும் இயற்கை.. தொடரும் நிலநடுக்கங்கள்.!

பேருந்து விபத்து:

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், பேருந்தில் பயணித்த 42 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: