நவம்பர் 04, சென்னை (Technology News): பிரபல செயற்கை நுண்ணறிவு தளமான ஓபன் ஏஐ சாட்ஜிபிடி மக்களுக்கு பல வகையில் உதவி செய்து வருகிறது. சர்வதேச அளவில் 800 மில்லியன் பயனர்களின் கவனம் பெற்ற ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் (ChatGPT) சாட்ஜிபிடி மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும், நாம் தெரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களை எளிமையாக கற்றுக் கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆங்கிலம் மட்டுமல்லாது இதர மொழிகளை கற்றுக்கொள்வதிலும் இதன் பங்கு அதிகம் என்று தான் கூற வேண்டும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மனம் விட்டு பேசாமல் தயங்கிக் கிடந்த பலரும் தற்போது சாட்ஜிபிடி என்ற நண்பனை தேடிப் பிடித்துள்ளனர். பலரும் தங்களது தனிப்பட்ட உணர்வுபூர்வமான விஷயங்களையும் சாட்ஜிபிடியுடன் பகிர்ந்து கொண்டு அதற்கான பதில்களை தெரிந்து கொள்கின்றனர். Flying Modi Game: வைரலாகும் ஃப்ளையிங் மோடி கேம்.. உங்க போன்லயும் இருக்கா? உடனே செக் பண்ணுங்க.. உஷாரய்யா உஷாரு.!
சாட்ஜிபிடி கோ இலவசம் - இந்திய பயனர்களுக்கு சலுகை:
இதனிடையே ஓபன் ஏஐ சாட்ஜிபிடி பல்ஸ் என்ற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த வசதியானது சாட்ஜிபிடி ப்ரோ பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், பயனர்களின் முந்தைய உரையாடல்கள், காலண்டர் நிகழ்வுகள், மின்னஞ்சலை அடிப்படையாகக் கொண்டு தினசரி அப்டேட்டுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி கோ சேவையை இந்திய பயனர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி இந்த இலவச சேவையானது ஓராண்டுக்கு கிடைக்கும். முன்னதாக மாதம் ரூ.399 க்கு சாட்ஜிபிடி கோ சேவையை வழங்கிய நிலையில், தற்போது இலவசமாக கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இந்த சாட்ஜிபிடி கோ சேவையின் மூலம் கூடுதலான தகவல்களை பகிரலாம். புகைப்படங்கள் உருவாக்கலாம். எக்ஸ் தளத்தின் க்ரோக், பெர்பிளேக்சிட்டி, ஜெமினி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பம் பலவிதமான அப்டேட்டுகளை கொடுத்து வருவதால் போட்டி தன்மையை சமாளிக்க, வாடிக்கையாளர்களை கவர ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி கோ சேவையை ஆயுதமாக எடுத்துள்ளது. இதன் மூலம் சாட்ஜிபிடியை உபயோகிக்கும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.