Coimbatore Love Killed: நள்ளிரவில் நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர்; தாய்மாமாவின் பரபரப்பு சம்பவத்தால் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!
காதலிக்கு மதுபோதையில் நண்பர்களுடன் பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல கதவைத்தட்டிய காதலனுக்கு மரணம் பரிசாக கிடைத்தது. காதலர்களை அலறவிடும் கோவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஜூன் 06, கோவை (Coimbatore Crime News): நள்ளிரவு நேரத்தில் காதலிக்கு மதுபோதையுடன் நபர்களை அழைத்துக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல கதவைத்தட்டிய காதலனுக்கு மரணம் பரிசாக கிடைத்தது. காதலர்களை அலறவிடும் கோவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரசாந்த் (வயது 21). அங்குள்ள செட்டிபாளையம் பகுதியில் 18 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால், காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என நினைத்த காதலன், நள்ளிரவு 12 மணியளவில் தனது நண்பர்களுடன் மதுபோதையில் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் இருப்பதால், கதவை திறந்து செல்லாமல் சுவரை ஏறிக்குதித்து திருடர்கள் போல நுழைந்துள்ளார். வீட்டின் கதவை கூட்டமாக தட்டிய கும்பலை கண்டு அதிர்ச்சியுடன் பெண்ணின் பெற்றோர் மற்றும் தாய்மாமா கதவை திறந்துள்ளார். Chennai Rains: கோடையின் வெயிலில் தவித்த சென்னை மக்களை மகிழ்வித்த மழை; குஷியில் சென்னைவாசிகள்.!
மிதமிஞ்சிய போதையில் மதராசபட்டினம் திரைப்பட காமெடி போல காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என கூறி இருக்கின்றனர். அப்போது, காதலன் பிரசாந்த் - பெண்ணின் தாய்மாமா விக்னேஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், பிரசாந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
வாழ்த்து சொல்ல அழைத்து வந்த நண்பனை, குத்துயிராக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கிய சில நொடியிலேயே பிரசாந்தின் உயிர் பறிபோனது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணின் தாய்மாமா விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Jun 06, 2023 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

