![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/06/Chennai-Rains-05-06-2023-Visual-Photo-Credit-ANI-380x214.jpg)
ஜூன் 05, சென்னை (Chennai News): சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச பணியாக 29 டிகிரி செல்சியசம் பதிவாகலாம். Morning Walking Benefits: காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா?.. உடல் எடையை குறைக்க அசத்தல் செயல்முறை.!
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று மதியத்திற்கு மேல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சென்னையின் நகர் பகுதியில் புறநகர் பகுதிகளில் மதியம் மற்றும் மாலை வேளையில் திடீரென மழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கத்தினால் பெரும் துயருக்கு உள்ளாகி இருந்த சென்னைவாசிகள் குளுகுளு சூழ்நிலையை மனதார அனுபவித்து மகிழ்ச்சியடைந்தனர்.
#WATCH | Rainfall in Chennai brings respite from the heat#TamilNadu pic.twitter.com/092miMC7Gm
— ANI (@ANI) June 5, 2023