New Married Man Died: திருமணமான 15 நாட்களில் இப்படியா நடக்கணும்?.. வேலைக்கு சென்று பிணமாக வீடு திரும்பிய கணவன்; அதிர்ச்சியில் புதுமணப்பெண்.!

வேலைக்கு சென்ற கணவன் மாலையில் வீடு திரும்புவார் என வாசலின் மேல் விழிவைத்து காத்திருந்த மனைவிக்கு போனில் வந்த அதிர்ச்சி தகவலால் குடும்பமே கண்கலங்கிய சோகம் தமிழகத்தில் நடந்துள்ளது.

Electric Shock Man Died (Photo Credit: Pixabay)

ஜூன் 16, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம், கெங்கநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் செல்போன் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் வசித்து வருபவர் ரபீனா. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வைத்தீஸ்வரர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இருவரும் தங்களின் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில், இன்று ரவீனாவுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெறவிருந்துள்ளது.

காலையில் கணவர் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அவர் மாலையில் வருவார் என குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி விமல்ராஜ் பரிதாபமாக பலியாகியுள்ளார். Suman About Sivaji Movie: பெண்கள் என்னை கூப்பிட்டு பாராட்டினார்கள் – சிவாஜி படத்தில் நடித்த அனுபவம் குறித்து கலகலப்பாக மனம் திறந்த சுமன்..! 

வீட்டில் நெட்ஒர்க் சேவையை சோதனை செய்து, அதன் அமைப்பை சோதிக்கச்சென்றபோது அலட்சியமாக செயல்பட்டதன் விளைவால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டவர் பரிதாபமாக பலியாகினார்.

இந்த தகவல் அறிந்த குடும்பத்தினர் கண்ணீருடன் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். திருமணமான 15 நாட்களில் அன்பு கணவனை இழந்தது மணப்பெண்ணுக்கு பேரதிர்ச்சியை மட்டுமே தந்திருக்கும் என்பதால் உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.

மின்சார கம்பிகளுக்கு அருகே கவனமாக இருக்க வேண்டும்; அலட்சியத்துடன் செயல்பட கூடாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement