கடலூர்: மீண்டும் மீண்டும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய தோழி.. கல்லூரி மாணவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை.!
கடலூர் பண்ருட்டியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் 20 வயது மாணவியுடன் ஓரினச்சேர்க்கை காதல் வைத்திருந்தார். தன் பாலின ஈர்ப்பு காரணமாக ஏற்பட்ட காதல் இறுதியில் தற்கொலையில் முடிந்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
ஆகஸ்ட் 31, பண்ருட்டி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் வசித்து வரும் 18 வயது மாணவி தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவருக்கு அதே கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்த 20 வயது மாணவியுடன் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் தோழிகளாக பழகி வந்த நிலையில், பின் நெருக்கம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து 18 வயது மாணவியின் அண்ணனுக்கு தெரிய வரவே, அவர் கண்டித்துள்ளார்.
உல்லாசமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் :
இதனால் அந்த மாணவி தனது தோழியிடம் பேச மறுக்கவே, ஆத்திரமடைந்த 20 வயது மாணவி தன்னிடம் பேசாவிட்டால் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த 18 வயது மாணவி நேற்று முன்தினம் வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணத்திற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை குடும்பத்தினர் கைப்பற்றிய நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. Koomapatti: கீழே கிடந்த ஜூஸ் பாட்டில்.. ஆசை ஆசையாக குடித்த 5 வயது சிறுவன் வாயில் நுரை தள்ளி பலி.. பெற்றோர்களே கவனம்.!
போலீசார் விசாரணையில் அம்பலமான உண்மை :
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் 20 வயது மாணவியை விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த 18 வயது மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு முன் மாணவி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து 20 வயது மாணவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள் :
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..
(The above story first appeared on LatestLY on Aug 31, 2025 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

