Koomapatti Child Death (Photo Credit : Pixabay / Youtube)

ஆகஸ்ட் 31, கூமாப்பட்டி (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, ராமசாமிபுரம் இமானுவேல் முடங்கி தெருவில் வசித்து வரும் 40 வயதான நபர் வீராசாமி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 36). தம்பதி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இருவருக்கும் கோடீஸ்வரன் என்ற 5 வயதுடைய மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள பள்ளியில் எல்கேஜி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வாயில் நுரை தள்ளி மயக்கம் அடைந்துள்ளார். Gold Rate Today: புதிய உச்சம் தொட்ட தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. 2 நாட்களில் ரூ.1,720 உயர்வு.. ஷாக் நிலவரம்.! 

கூமாப்பட்டி சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம் :

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால் அங்கு சிறுவன் சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இந்த விஷயம் குறித்து தகவலறிந்த கூமாபட்டி காவல்துறையினர் சிறுவனின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது பாட்டில் ஒன்றில் இருந்த குளிர்பானத்தை குடித்ததாகவும், அதன் பின்னரே அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை :

இதனால் சிறுவன் எந்த குளிர்பானத்தை குடித்தார்? அதில் விஷம் ஏதும் கலந்திருந்ததா? அல்லது காலாவதியான குளிர்பானத்தை குடித்தாரா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.