ஆகஸ்ட் 21, கனடா (World News) : கனடாவின் (Canada) பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்திலுள்ள கெலோவ்னாவில் (Kelowna) காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு குடியிருக்கும் 30,000க்கும் மேற்பட்ட மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அம்மாகாணத்தின் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இங்கு மோசமான நிலைமை நீடுத்து வருவதால் தற்போது 30000 பேரை வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. மேலும், கூடுதலாக 36000 பேரை வெளியேற்றும் உத்தரவு கொண்டுவரப்படும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார் அந்த மாகாணத்தின் அவசர கால மேலாண்மை அமைச்சர் போவின் மா (Bowin Ma). வெளியேற்ற உத்தரவுகளை மக்கள் பின்பற்றுவது எத்தனை கட்டாயமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். Trending Video: வானெங்கும் ஒளிர்ந்த மின்னல் கீற்றுகள்; எரிமலைக்குள் இருந்து தலைகீழாக பாய்ந்த பகீர் காட்சிகள்.!
இந்த வாழ்வா சாவா என்ற நிலையில், அரசின் உத்தரவை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஹோட்டல்கள் மற்றும் தற்காலிகமாக தங்கும் பிற இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
கெலோவ்னாவின் அருகிலுள்ள ஆலிவர் (Oliver), கம்லூப்ஸ் (Kamloops) மற்றும் பென்டிக்டன் (Penticton) நகரங்களிலும், வெர்னான் (Vernon) மற்றும் அமெரிக்க எல்லைப்பகுதிக்கு அடுத்துள்ள ஓஸோயோஸ் (Osoyoos) நகரிலும் வெளிநபர்கள் வந்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வெளியேற்றப்படுவதற்கான அதிகாரப்பூரவமான காலக்கெடு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முடிந்துவிட்ட நிலையில், 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் நகரிலிருந்து வெளியேறிவிட்டனர். கனடா இதுவரை உலகின் எந்த பகுதியும் கண்டிராத மோசமான காட்டுத்தீயை சந்தித்து வருகிறது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை என்றாலும் குறைந்தது 4 தீயணைப்பு வீரர்களாவது இறந்திருக்கக்கூடும் என்று விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ:
The after math of the wild fire in British Columbia Canada where I live still kinda hoping I get to see my dad and go to @FANEXPOCANADA and also not get evacuated while I am a way pic.twitter.com/u4BFnzISe7
— Alexandergc (@monk482) August 20, 2023
மேற்கு கேலோவ்னா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ:
State of emergency declared in West Kelowna, as raging wildfires out of control spreads in Kelowna, British Columbia, Canada.
[read more: https://t.co/WOowncHUvD]pic.twitter.com/dToYuD0kcD
— Massimo (@Rainmaker1973) August 18, 2023