Love Couple Married in Police Station: கர்ப்பமாக்கிவிட்டு கைவிட நினைத்த காதலனை, காவல் நிலையத்தில் கரம்பிடித்த இளம்பெண்.!

தன்னை காதலித்து தனிமையில் நெருங்கி கர்ப்பமாக்கிய காதலனை, பெண்மணி காவல் நிலையத்தில் உள்ள கோவிலில் அதிகாரிகள் முன்னிலையில் கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

Love Couple Married in Police Station: கர்ப்பமாக்கிவிட்டு கைவிட நினைத்த காதலனை, காவல் நிலையத்தில் கரம்பிடித்த இளம்பெண்.!
Marriage (Photo Credit: Pixabay)

டிசம்பர் 09, பண்ரூட்டி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா. பட்டதாரி பெண்மணி ஆவார். இதே கிராமத்தை சேர்ந்தவர் ஹரி. இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நட்பு காதலாக மலர்ந்தது: இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, காதல் ஜோடி பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில், இருவரும் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அபிநயா கர்ப்பமாகி இருக்கிறார்.

தனிமையில் நெருங்கியதால் கர்ப்பம்: தான் 4 மாத கர்ப்பமாக இருக்கும் தகவலை ஹரியிடம் தெரிவித்த அபிநயா, தன்னை திருமணம் செய்துகொள்ளக்கூறி காதலனிடம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனோ, கருவை கலைத்து வந்தால் தான் உன்னை திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளார். MS Dhoni Vacation: குடும்பத்துடன் இன்பசுற்றுலா செல்லும் தல தோனி: விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்.! 

கைவிட நினைத்த காதலன்: கருவை கலைக்க மனமில்லாத அபிநயா, காதலன் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட முயற்சிப்பதாக எண்ணியுள்ளர். இதனையடுத்து, தனது குடும்பத்திற்கு விஷயத்தை எடுத்துரைத்த பெண்மணி, பண்ரூட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் ஹரியை பிடித்து விசாரித்தனர்.

காவல் நிலையத்தில் அம்பலமான உண்மை: அப்போது, இருவரும் காதல் வயப்பட்டு தனிமையில் நெருங்கியதால், அபிநயா கர்ப்பமான விவகாரம் உறுதியானது. பின் இருவருக்கும் காவல் நிலையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் உடனடி திருமணமும் நடைபெற்றது. காவல் துறையினர் காதல் ஜோடிக்கு வேட்டி, சேலை, மாலை ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தனர்.

திருமண வாழ்த்தும், அறிவுரையும்: திருமணம் முடித்த கையோடு காவல் துறையினரிடம் புதுமண தம்பதிகள் ஆசியும் பெற்றனர். காவல் துறையினர் ஹரிக்கு உரிய அறிவுரை வழங்கி மனைவியுடன் அனுப்பி வைத்தனர். இவர்களின் திருமண காவல் துறையினர் முன்பே பதிவும் செய்யப்பட்டது.

(The above story first appeared on LatestLY on Dec 09, 2023 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).