Customs Seized Gold At Airport: கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.. சுங்கத்துறை தீவிர விசாரணை..!

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

Customs Seized Gold At Airport: கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.. சுங்கத்துறை தீவிர விசாரணை..!
Customs Seized Gold At Airport (Photo Credit: @simplicitycbe X)

ஆகஸ்ட் 26, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் (Coimbatore International Airport) ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் (Customs Officers) பறிமுதல் செய்தனர். கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படுகின்றது. இந்நிலையில், தினம்தோறும் காலை 3.45 மணியளவில் கோவை வரும் ஷார்ஜா விமானம், மீண்டும் அதிகாலை 4.30 மணியளவில் ஷார்ஜாவுக்கு புறப்பட்டுச் செல்லும். Thanjavur: ஆனந்த குளியல் சோகத்தில் முடிந்த பரிதாபம்; 2 சிறார்கள் காவேரியில் மூழ்கி பலி.!

அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) காலை ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானத்தில் பயணிகள் யாரும் அதற்கு உரிமை கோராததால், இதுகுறித்து விமானத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).